உதவித்தூதரகம்
16th Floor, “Suhurupaya”,
Sri Subhuthipura Road,
Battaramulla.
Tel : +94 112 275 575
Fax : +94 112 473 899
Email : consular@mfa.gov.lk
- Affidavits/Power of Attorney
- Attestation of Police Reports on missing passports
- Certificates issued by Chartered or Professional Institutions
- Certificates issued by Private/ International Schools
- Certificates issued by religious or cultural institutions
- Certificates issued by the Department of Examinations
- Certificates issued by the Institutions established for Technical and Vocational Training
- Certificates issued in respect of Foreign Examinations recognized locally and internationally
- Certificates of Births, Marriages and Deaths
- Certificate for Confirmation of the Unmarried Status
- Child Adoption Certificates
- Citizenship Certificate
- Degree Certificates awarded by foreign Universities
- Degree certificates awarded by local Universities
- Documents related to Business / Companies
- Driving Licenses
- Export Documents
- Grama Niladari Certificates
- Judicial Documents
- Licenses or documents issued by various Public Institutions under certain statutory authorities
- Medical Certificates
- National Identity Cards
- Passports
- Police Clearance Reports issued by the Police Head Quarters
- Police Reports issued by Foreign Countries
- Police Reports issued by Police Stations
- School Leaving Certificates
- Service Certificates of Private Institutions
- Training Certificate issued by Sri Lanka Foreign Employment Bureau (SLBFE)
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான இழப்பீடு
கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு, இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் அவர்களது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கும், சம்பந்தப்பட்ட வெளிநாட்டு அதிகார அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் இழப்பீடு, காப்பீட்டுப் பலன்கள் மற்றும் பிற சட்டப்பூர்வ உரிமைகளைப் பெறுவதற்கு உதவுகிறது.
________________________________________
1. உதவி வகைகள்
1.1 மரண இழப்பீடு
இறந்த இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் இழப்பீடு, காப்பீட்டுப் பலன்கள் மற்றும் பிற உரிமைகளைப் பெறுவதற்கான உதவி.
1.2 மரணம் தவிர்ந்த காரணங்களுக்கான இழப்பீடு
காயம், நோய், ஒப்பந்த மீறல்கள் அல்லது ஏனைய நியாயமான கோரிக்கைகள் போன்ற உயிரிழப்பு அல்லாத நேர்வுகளின்போதான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவி.
________________________________________
2. சேவையின் நோக்கம்
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இழப்பீடு, காப்பீட்டுப் பலன்கள் மற்றும் ஏனைய சட்டப்பூர்வ உரிமைகளைப் பெறுவதை எளிதாக்குதல்.
________________________________________
3. தேவைப்படும் ஆவணங்கள்
விண்ணப்பதாரர்கள் (நெருங்கிய உறவினர் அல்லது ஊழியர்) சமர்ப்பிக்க வேண்டியவை:
• கோரிக்கை கடிதம்
• பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
• கடவுச்சீட்டு நகல் (இறப்பு அல்லாத நிகழ்வுகளுக்கு)
• ஆதாரமளிக்கும் ஆவணங்கள் (இருந்தால்), அவை:
o தொழில் வழங்குநர் விபரங்கள்
o வேலைவாய்ப்பு/சேவை ஒப்பந்தம்
o நிறுவன அடையாள அட்டை
o காப்பீட்டுக் கொள்கைசார் விபரங்கள்
o வங்கி கணக்கு விபரங்கள்
o மருத்துவ அறிக்கைகள்
________________________________________
4. விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல்
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்:
• நேரில், தபால் மூலமாக, அல்லது மின்னஞ்சல் வழியாக பின்வரும் முகவரிக்கு:
இழப்பீட்டுப் பிரிவு, கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
• பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள்: கண்டி, குருநாகல், மாத்தறை, யாழ்ப்பாணம், திருகோணமலை
________________________________________
5. விண்ணப்பக் கட்டணம்
இந்தச் சேவைக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.
________________________________________
6. விண்ணப்பங்களைப் பரிசீலித்தல்
• இழப்பீடு பெறுவதற்கான தகுதியையோ அல்லது அடுத்தகட்ட நடவடிக்கையையோ தீர்மானிக்க விண்ணப்பங்கள் மீளாய்வு செய்யப்படும்.
• மேலதிக ஆவணங்கள் எதுவும் தேவைப்பட்டால், வாரிசு அல்லது தொழில் வழங்குனருக்குத் தபால் மற்றும் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்.
• தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் வாரிசு அல்லது தொழில் வழங்குனர் தொடர்புடைய நிறுவனங்களுக்கோ அல்லது நிகழ்நிலை முறைமைகளுக்கோ வழிகாட்டப்படலாம்.
________________________________________
7. இழப்பீடு வழங்குதல்
மரணம் தவிர்ந்த நிகழ்வுகள்:
நிகழ்வைப் பொறுத்து, கொடுப்பனவானது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மூலம் செயலாக்கப்பட்டு, ஊழியருக்கு மாற்றப்படலாம் அல்லது நேரடியாக ஊழியருக்கு வழங்கப்படலாம்.
மரணித்தல் நேர்வுகள்:
நேர்வைப் பொறுத்து, பணம் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வழங்குவதற்காக அரச நிதியத்திற்கு செலுத்தப்படலாம் அல்லது அடுத்த வாரிசுக்கு நேரடியாக வழங்கப்படலாம்.
இச்செயன்முறை பூரணமாகும் தருணத்தில் ஊழியருக்கோ அல்லது அடுத்த வாரிசுக்கோ முறையாக அறிவிக்கப்படும்.
________________________________________
8. சேவைசார் உறுதிப்பாடு
அமைச்சு பின்வருவனவற்றிற்கு உறுதிபூண்டுள்ளது:
• தொலைபேசி அல்லது உத்தியோகபூர்வ தகவல் தொடர்பு முறைகள் மூலம் சரியான நேரத்தில் இற்றைப்படுத்தல்களை வழங்குதல்
• அனைத்து கோரிக்கைகளும் இரகசியத்தன்மையுடனும், மரியாதையுடனும் கையாளப்படுவதை உறுதி செய்தல்
• செயன்முறை முழுவதும் தெளிவான வழிகாட்டுதலை வழங்குதல்
________________________________________
9. தொடர்புகொள்ளவேண்டிய தரப்பு தொடர்பான தகவல்
இழப்பீட்டுப் பிரிவு
கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
16வது தளம், “சுஹுருபாயா”
ஸ்ரீ சுபூதிபுர வீதி
பத்தரமுல்ல
இலங்கை
+94 11 227 5528
compensation.consular@mfa.gov.lk
வெளிநாட்டில் ஒரு இலங்கையரின் மரணம்
வெளிநாட்டில் நேரும் இலங்கையரொருவரின் இறப்பைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள அவரது குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து நடைமுறைகளிலும் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு உதவுகிறது.
________________________________________
1. எமது சேவைகள்
கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு பின்வருவனவற்றிற்கு ஆதரவை வழங்குகிறது:
• அடக்கம் செய்தல், தகனம் செய்தல் அல்லது பிரேதங்களைத் தாயகம் கொண்டு வருதல், அஸ்தியைத் தாயகம் கொண்டு வருதல் உட்பட அனைத்து நடைமுறைகளையும் ஒருங்கிணைத்தல்.
• இலங்கையில் சட்டப்பூர்வ அங்கீகாரத்திற்காக வெளிநாட்டில் ஏற்படும் மரணங்களைப் பதிவு செய்தல்
• நெருங்கிய உறவினரிடம் மரணித்தவரின் உடைமைகளை ஒப்படைப்பதை எளிதாக்குதல்
________________________________________
2. முதலில் செய்யவேண்டியது:
வெளிநாட்டில் மரணம் நேர்ந்தால், கொன்சியூலர் நடைமுறைகளைத் தொடங்குவதற்கு நெருங்கிய உறவினர் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கியமானது: முழுமையான மற்றும் துல்லியமான ஆவணங்களை முன்கூட்டியே சமர்ப்பிப்பது தாமதங்களைத் தவிர்க்க உதவும்.
கட்டணங்கள்: ஆவணச் சமர்ப்பிப்புக்குக் கட்டணம் எதுவும் இல்லை.
________________________________________
3. தேவையான ஆவணங்கள் (அனைத்துவிதக் கோரிக்கைகளுக்கும்)
பின்வருவனவற்றைச் சமர்ப்பிக்கவும்:
• பூர்த்தி செய்யப்பட்ட புகாரளித்தற் படிவம் (சிங்களம் | தமிழ் | ஆங்கிலம்)
• நெருங்கிய உறவினர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நபரிடமிருந்து ஒப்புதல் சத்தியக்கடதாசி (சிங்களம் | தமிழ் | ஆங்கிலம்)
• மறுப்பு அல்லாச் சத்தியக் கடதாசி(கள்) (நெருங்கிய உறவினர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி பலர் இருந்தால்)
• இறந்தவரின் பிறப்புச் சான்றிதழ்
• இறந்தவரின் தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் கடவுச்சீட்டின் நகல்கள்
• கிராம அலுவலரால் வழங்கப்பட்டு, பிரதேச செயலாளரால் மேலொப்பமிடப்பட்ட குடும்பப் பின்னணி அறிக்கை
• பெயர் வேறுபடும்போது பெயர்கள் இறந்த நபருடையதுதான் என்பதை உறுதிப்படுத்தும் சத்தியக்கடதாசி
________________________________________
4. மேலதிக ஆவணங்கள்
4.1 இறந்தவர் திருமணமானவராக இருந்தால்
• திருமணச் சான்றிதழ் அல்லது விவாகரத்துச் சான்றிதழ் (பொருந்தும் பட்சத்தில்)
• திருமணம் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்படவில்லை என்றால், உறவை உறுதிப்படுத்தும் வாழ்க்கைத் துணையின் சத்தியக்கடதாசி
• வாழ்க்கைத் துணையின் தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் பிறப்புச் சான்றிதழ்
• குழந்தைகளின் தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள் (பொருந்தும் பட்சத்தில்)
• வாழ்க்கைத் துணையின் இறப்புச் சான்றிதழ் (வாழ்க்கைத் துணை இறந்திருந்தால்)
________________________________________
4.2 இறந்தவர் திருமணமாகாதவராக இருந்தால்
• பெற்றோரின் திருமணச் சான்றிதழ்
• பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளின் தேசிய அடையாள அட்டைகள் (NICs) மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள்
• திருமணமாகாதவர் என்பதை உறுதிப்படுத்தும் சத்தியக் கடதாசி (பெற்றோரில் ஒருவர், அல்லது இரு பெற்றோரும் இறந்திருந்தால் உடன்பிறந்தவர் வழங்க வேண்டும்)
________________________________________
5. ஆவணங்களைச் சமர்ப்பித்தல்
5.1 வேலை நாட்களில்
நேரம்: காலை 8:30 மணி முதல் – மாலை 4:00 மணி வரை
ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய இடங்கள்:
• மரணப் பிரிவு, கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
• பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள் (கண்டி, குருநாகல், மாத்தறை, யாழ்ப்பாணம், திருகோணமலை)
• ஏதேனும் ஒரு பிரதேச செயலக அலுவலகம்
________________________________________
5.2 வார இறுதி நாட்கள் மற்றும் அரச விடுமுறை நாட்களில்
நேரம்: காலை 8:30 மணி முதல் – மாலை 4:00 மணி வரை
ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி:
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
குடியரசுக் கட்டிடம்
சர் பாரோன் ஜயதிலக மாவத்த
கொழும்பு 01
இலங்கை
________________________________________
6. பிரேதங்களைத் தாயகம் திருப்பி அனுப்புதல்
6.1 தகுதி
• இலங்கை குடிமக்கள்
• வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் இலங்கையில் பிறந்த நபர்கள்
• இலங்கை குடிமக்களை மணந்த வெளிநாட்டினர்
________________________________________
6.2 தாயகம் திரும்புதலுக்குத் தேவையான ஆவணங்கள்
• இரத்து செய்யப்பட்ட கடவுச்சீட்டு (அடையாளச் சான்று)
• மரணத்திற்கான காரணத்தைக் குறிப்பிடும் இறப்புச் சான்றிதழ்
• உடலைப் பதப்படுத்தியதற்கான சான்றிதழ்
• தொற்று நோய் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்
• போலீஸ் / மரண விசாரணை அதிகாரி / தடயவியல் அறிக்கை (பொருந்தினால்)
• சம்பந்தப்பட்ட இலங்கைத் தூதரகம்/பணியகத்திடமிருந்து மறுப்பல்லாச் சான்றிதழ்
________________________________________
6.3 சிறப்பு சுகாதாரத் தேவைகள்
தொற்று நோய்கள் சம்பந்தப்பட்ட நேர்வுகளில், தாயகம் திரும்புதல் மறுக்கப்படலாம்.
அரச சுகாதார விதிமுறைகளின்படி பின்வருவன தேவைப்படலாம்:
• சிறப்பு ஒப்புதல்கள்
• கட்டாயக் காத்திருப்புக் கால வரையறைகள்
• மாற்று ஏற்பாடுகள் (உதாரணம்., உள்ளூர் அடக்கம் அல்லது தகனம்)
________________________________________
7. வெளிநாட்டில் இறப்பைப் பதிவு செய்தல்
ஒரு இறப்பைப் பதிவு செய்வது இலங்கையில் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை உறுதி செய்கிறது.
செயன்முறை:
1. தேவையான ஆவணங்களைப் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் மத்திய பதிவகத்தில் சமர்ப்பிக்கவும்.
2. கொன்சியூலர் அலுவல்கள் ரூ. 8,180 செயற்படுத்தற் கட்டணத்தைச் செலுத்தி, பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளவும்.
3. இலங்கை இறப்புச் சான்றிதழ் தயாரானதும், வாரிசுதாரருக்குத் தெரிவிக்கப்படும்.
4. மேலதிக சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பதிவாளர் நாயகம் திணைக்களத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
________________________________________
8. இறந்தவரின் தனிப்பட்ட பொருட்கள்
தனிப்பட்ட உடைமைகளை வாரிசுதாரரிடம் ஒப்படைக்க நாம் உதவுகிறோம்.
8.1 கோரிக்கை விடுப்பது எப்படி
• கொன்சியூலர் அலுவல்கள் பிரிவிற்கு மின்னஞ்சல், தபால் அல்லது நேரில் எழுத்துப்பூர்வ கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
• உடைமைகள் சேகரிப்பதற்குத் தயாரானதும் வாரிசுதாரருக்குத் தெரிவிக்கப்படும்.
கட்டணங்கள்: இலவசம்
பொதுவாக வழங்கப்படும் பொருட்கள்: ஆவணங்கள் மற்றும் நகைகள்
________________________________________
8.2 பிரதிநிதியொருவருக்கு அங்கீகாரம் அளித்தல்
பிரதிநிதியொருவர் சம்பந்தப்பட்ட தூதரகம்/பணியகத்திலிருந்து நேரடியாகப் இறந்தவரின் உடைமைகளைப் பெறும் பட்சத்தில்:
• வாரிசுதாரரிடமிருந்து அங்கீகார சத்தியக் கடதாசியைச் சமர்ப்பிக்கவும்.
• பிரதிநிதியின் கடவுச்சீட்டின் நகலை வழங்கவும்.
________________________________________
9. சேவை உறுதிப்பாடுகள்
அமைச்சு பின்வருவனவற்றிற்கு உறுதிபூண்டுள்ளது:
• தொலைபேசி அல்லது ஏனைய கிடைக்கக்கூடிய தகவல் தொடர்பு முறைகள் மூலம் வாரிசுதாரர்களுக்கு உரிய நேரத்தில் தகவல்களை வழங்குதல்
• அனைத்து கோரிக்கைகளும் இரகசியத்தன்மையுடனும், மரியாதையுடனும் கையாளப்படுவதை உறுதி செய்தல்
• செயன்முறை முழுவதும் குடும்பங்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல் வழங்குவதில் உதவுதல்
________________________________________
10. தொடர்புத் தகவல்
மரணப் பிரிவு
கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
16வது தளம், “சுஹுருபாய”
ஸ்ரீ சுபூதிபுர வீதி
பத்தரமுல்ல
இலங்கை
+94 11 227 5525
death.consular@mfa.gov.lk
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவின் நாடு திரும்புதல் பிரிவானது, வெளிநாடுகளில் பல்வேறு சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் இலங்கை நாட்டினரை நாட்டிற்கு வரவழைப்பதற்குத் கொன்சியூலர் உதவியை வழங்குகிறது. இப்பிரிவு, வெளிநாட்டில் சிக்கித் தவிப்பவர்கள், தடுத்து வைக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், அல்லது காவற்துறையில் காவலில் தடுத்துவைக்கப்பட்டவர்கள், அத்துடன் சிறைத் தண்டனை அனுபவிப்பவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள், அல்லது ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குகிறது.
மேலும், இப்பிரிவு, இலங்கையின் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களத்துடன் ஒருங்கிணைந்து, பிற நாடுகளின் எல்லைக் கடற்பரப்பிற்குள் நுழைந்த அல்லது அங்கீகரிக்கப்படாத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் மீனவர்கள் தொடர்பான விடயங்களைக் கண்காணிக்கிறது.
தகுதி: வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான முறை
• கொழும்பிலுள்ள, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின், கொன்சியூலர் பிரிவில் நேரடியாகச் சமர்ப்பித்தல்;
• தேவையான தகவல்களுடன் தபால் மூலம் (விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது);
• உரிய பிரதேச செயலகத்தில் நேரடியாகச் சமர்ப்பித்தல்.
விண்ணப்பப் படிவத்தைப் பெறக்கூடிய இடங்கள்:
கொன்சியூலர் விவகாரப் பிரிவு (தலைமை அலுவலகம்)
16-ஆம் தளம், “சுஹுருபாய”
ஸ்ரீ சுபபூத்திபுர வீதி,
பத்தரமுல்ல
தொடர்பு விபரம்: 0112275575
பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள்:
யாழ்ப்பாணம்
மாவட்டச் செயலகம்,
கண்டி வீதி,
யாழ்ப்பாணம்
தொடர்பு விபரம்: +94212215972
கண்டி
இல: 1065, 2ஆம் தளம்,
மஹிந்த ராஜபக்ஷ தகவல் தொழில்நுட்ப மையம்,
கெட்டம்பே, பேராதெனிய,
கண்டி
தொடர்பு விபரம்: +94812384410
குருநாகல்
நன்னடத்தை மற்றும் சிறுவர் நல சேவைகள் திணைக்களம்,
இல: 02, தம்புள்ள வீதி,
குருநாகல்
தொடர்பு விபரம்: +94372225931
மாத்தறை
இல: 391, அனகாரிக தர்மபால மாவத்த,
பம்புரன,
மாத்தறை
தொடர்பு விபரங்கள்: +9441226697 / +9441226714
திருகோணமலை
முதலமைச்சர் செயலகம்,
உள் துறைமுகச் சாலை,
திருகோணமலை
தொடர்பு விபரங்கள்: +94262223186 / +94262223182
விண்ணப்பத்திற்கான கட்டணம்: இல்லை
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டிய நேரம்: வேலை நாட்களில் காலை 08:30 மணி முதல் மாலை 15:00 மணி வரை
இந்தச் சேவைக்கான கட்டணம்: இல்லை
சேவையை வழங்க எடுத்துக்கொள்ளும் காலம்:
• புகாரளிக்கப்பட்ட வழக்குகளின் தீவிரத்தைப் பொறுத்தது;
• சம்பந்தப்பட்ட நாடுகளில் விசாரணைகள் அல்லது சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன்;
தேவையான துணை ஆவணங்கள்:
• சம்பந்தப்பட்ட நபரின் கடவுச்சீட்டு தரவுப் பக்கத்தின் நகல்;
• புகார்தாரரின் தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் தொடர்பு விபரங்களுக்கான சான்று;
• நெருங்கிய உறவினர் (NoK) விபரங்கள்;
• சம்பந்தப்பட்ட நபரின் தொடர்பு விபரங்கள்;
விருப்புத்தேர்விற்குரியவை:
• இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடமிருந்து (SLBFE) பெறப்பட்ட பதிவு விபரங்கள்
• உள்ளூர் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகமையிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களுக்கான சான்று
I. தாமதமான பிறப்புப் பதிவுக்கு வசதியளித்தல் (இலங்கைக்கு வெளியே நிகழும் பிறப்புகள்)
II. வெளிநாட்டுப் பட்டச் சரிபார்ப்புகளைப் பெறுவதற்கு உதவுதல்
III. வெளிநாட்டுக் காவல் துறை அனுமதிச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு உதவுதல்
IV. வெளிநாட்டு இலங்கையர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் புகார்கள் மற்றும் விசாரணைகளைக் கையாளுதல்
V. வெளிநாட்டிலுள்ள இலங்கையரின் இருப்பிடத்தைக் கண்டறிய உதவுதல்
VI. நடமாடும் கொன்சியூலர் சேவைகளை நடத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குதல்
VII. இதர விடயங்கள்

